யாழ்.பல்கலை மாணவர்களுக்கு இடையில் மோதல்


யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்.பல்கலை கழகத்தில் முகாமைத்துவ மாணவர்களின் நிகழ்வொன்று கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. 

அந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மைதானத்தில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை அங்கிருந்த விரிவுரையாளர்கள் அவதானித்து இரு மாணவர்கள் குழுக்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

அதன் தொடர்ச்சியாக நேற்றைய சனிக்கிழமை மாலை மீண்டும் இரு மாணவர் குழுக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கைக்கலப்பு ஏற்பட்டது 

அதில் மூன்றாம் வருட மாணவன் மீது இரண்டாம் வருட மாணவன் தனது கையில் அணிந்திருந்த உலோக காப்பினை கழட்டி தாக்கியதில் மாணவன் காயமடைந்துள்ளான். 

காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் முகாமைத்துவ பீடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

No comments