கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி!


உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு  சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக இந்த  முன்மொழிவு நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments