ஊழியர் சேமலாப நிதிக்கு ஆபத்தா?
ஊழியர் சேமலாப நிதி மீது அரசாங்கம் கை வக்காது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊழியர் சேமலாப நிதி மீது அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது. எனவே மக்களின் நிதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 9 வீத வட்டிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதுடன், வங்கிகளில் வைப்பு செய்துள்ள 57 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.
வங்கிகள் ஏற்கனவே 50 வீதத்திற்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்துள்ளதால் அவற்றின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும்வரை ஊகங்களைத் தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் வெள்ளிக்கிழமையை வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment