சீனாவில் வெடி விபத்து - 31 பேர் உயிரிழப்பு


சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments