பொலிஸ் அதிரடி படையினரின் துப்பாக்கி சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் உயிரிழப்பு


எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடைய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்காக இன்றைய தினம் சனிக்கிழமை  அதிகாலை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் போது, குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடாத்திய போது , விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொடை பெஸ்டியன் மாவத்தை மற்றும் அம்பலாங்கொடையில் இடமபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 22 வயதுடைய  முன்னாள் இராணுவவீரர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments