வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி பணிப்பு
அமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிப்பிரதேசங்களுக்கான பயணங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பை அடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதிவரை அமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும் புதிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்ற நிலையில் பொதுஜன பெரமுன சார்பாக அமைச்சுப்பதவிகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து இதற்குரிய பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பில் இந்த விடயம் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அத்தோடு சமகால அரசியல் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளோடும் சந்திப்பு இடம்பெறவுள்ளதால் வெளிநாட்டு பயங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment