குருநகரில் ஹெரோயினுடன் இளைஞன் கைது


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் விசேட அதிரடி படையினரால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு  கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் ஐந்து மாடி வீட்டு தொகுதிக்கு அருகில் குறித்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது , 07 கிராம் 05 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் இளைஞனையும் . மீட்கப்பட்ட போதைப்பொருளையும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர். 

No comments