வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய குடத்தனை இளைஞர் உயிரிழப்பு!


முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி  அம்மன்  ஆலயத்திற்கு சென்று விட்டு  வடமராட்சி கிழக்கு  குடத்தனை பகுதியில் உள்ள  தனது வீடு நோக்கி  பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த நிரோஜன் (வயது 31) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

வற்றாப்பளை கண்ணகி  அம்மன்  ஆலயத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்று விட்டு  வடமராட்சி கிழக்கு  குடத்தனை பகுதியில் உள்ள  தனது வீடு நோக்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் , வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments