ரஷ்யாவுக்கு எதிராக எதிர்தாக்குதல்களை ஆரம்பித்து விட்டதாக உக்ரைன் அறிவிப்பு


ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களை உக்ரைன் ஆரம்பித்து விட்டதாக மேற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ரஷ்யா ஆக்கிரமிரத்துள்ள முன்னரங்க நிலைகளை நோக்கி படைகள் முன்னேறியதாக உக்ரைன் உக்ரைனின் துணை பாதுகாப்பு மந்திரி ஹன்னா மாலியார் டெலிகிராமில் எழுதினார்.

உக்ரைன் நினைத்துபோல் பொிய அளவில் முன்னேற்றங்களை செய்ய முடிவில்லை என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

பாக்முட் பகுதி நோக்கிய எதிர்த் தாக்குதலில் சில இடங்களை உக்ரைக் கைப்பற்றியதாக கூறுகிறது.

நாங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற பகுதிகளிலிருந்து  விட்டு விட்ட இடத்தையே உக்ரைனியப் படைகள் கைப்பறியதாக வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் விளக்கம் அளித்துள்ளார். தேவைப்பட்டால் மீண்டு அந்த இடங்களை பிடிக்க நாங்கள் வருவோம் என்று அவர் மேலும் கூறினார்.

அதே நேரத்தில், உக்ரைனின் தரைப்படைகளின் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி, உக்ரேனியப் படைகள் பக்முட்டில் முன்னோக்கி நகர்கின்றன என்றார்.

ஆறு காலட்படைகளைக் கொண்ட படைகளைக் கொண்டு பல்வேறு இடங்களில் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களை உக்ரைனியர்கள் ஆரம்பித்துள்ளனர்.

டொனெட்ஸ்கில் பெரிய அளவிலான தாக்குதலை முறியடித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 23 தடவைகள் உக்ரைனியப் படைகள் முன்னேறுவதற்கு முயற்சி செய்தாகவும் இதில் 250 உக்ரைனியப் படையினர் கொல்லப்பட்டதுடன் 16 டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அழித்துவிட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உக்ரைன் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.


No comments