உண்மை தெரியாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிவாயு கொண்டுவர டொலர்கள் இல்லாத நாட்டை தலைமை தாங்கி, இரண்டு மாதங்களுக்குள் வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிதியை பலப்படுத்தி நாட்டின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தவற்றை மறந்துவிட்டு இந்த உண்மை தெரியாமல் எதிர்க்கட்சிகள் தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன என்றும் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டார்.

No comments