யாழில். மின்சாரம் தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு


மின் மோட்டரை ஆழியை (சுவிச்) போட்ட போது மின்சாரம் தாக்கி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இருந்தோர் வெளியில் சென்று இருந்த சமயம் வீட்டில் மின் மோட்டரை இயக்கி தண்ணீர் பெற முயன்ற போது , மின் மோட்டார் ஆழியை போட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments