துருக்கியத் தேர்தல்: எதிர்வரும் 28 ஆம் திகதி இறுதி முடிவு! கிங் மேக்ராக ஓகன்


துருக்கியில் நடைபெற்று முடிந்து அதிபர் தேர்லுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமற்ற முடிவுகள் வெளியாகியுள்ளன.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 2மணி நிலவரப்படி துருக்கியின் தற்போதைய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் அவரது நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சிக்கு தொடர்ந்து மூன்றாவது மற்றொரு வெற்றியுடன் முடிவடைந்தன.

ரெசெப் தையிப் எர்டோகன் தலைமையிலான மக்கள் கூட்டணி கட்சி 49.5 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. சமநேரத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 267 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.

கெமால் கிலிக்டரோக்லுவின் 6 கட்சிகள் இணைந்த தேசியக் கூட்டமைப்பு 44.89 விழுக்காடு பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது. அக்கட்சி 169 நாடாளுமன்ற இடங்களில் வென்றுள்ளது.

சினன் ஓகனின் ஏரிஏ கூட்டமைப்பு 5.17 விழுக்காடு பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 50 இடங்களைப் பெற்றது.

அதிபர் தேர்தலில் 50 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகளைப் பெறும் நபரே நேரடியாக துருக்கிய ஐனாதிபதியாகலாம். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எவரும் 50 விழுக்காட்டுக்கு மேல் எடுக்காததால்  எதிர்வரும் 28 ஆம் திகதி யார் அடுத்த ஜனாதிபதி என்ற முடிவை அறிவிக்கவுள்ளது.

சினன் ஓகனின் ஏரிஏ கூட்டமைப்பு 5.17 விழுக்காடு பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இக்கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவரே துருக்கியின் ஜனாதிபதியா வருவார். இந்நிலையில் சினன் ஓகனின் ஏரிஏ கூட்டமைப்பு ஒரு வலதுசாரிக் கட்சியாகும். ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கைரீதியாக பல முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் இவரே கிங் மேக்ராக உள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு என்பன துருக்கியில் ரெசெப் தையிப் எர்டோகன் தலைமையிலான மக்கள் கூட்டணி கட்சிக்கு முடிவு கட்டி வீட்டுக்கு அனுப்புவதை விரும்பின. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யப் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா மீது போடப்படும் ஒவ்வொரு தடைகளுக்கும் துருக்கி செவிசாய்காமல் ரஷ்யாவுக்கு முட்டுக்கட்டையாக உள்ளமை இவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

அமெரிக்காஈ பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன கெமால் கிலிக்டரோக்லுவின் 6 கட்சிகள் இணைந்த தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் ரஷ்யாவை கருக்கடலுக்குள்ளே முடக்கிவிடலாம் என திட்டம் தீட்டியிருந்தை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் கருங்கடலின் முழுக் கட்டுப்பாடு துருக்கியில் இருப்பதால் துருக்கிய எதிர்க்கவோ பகைக்கவே முடியாமல் குறித்த நாடுகள் விழி பிதுங்கிய நிலையில் இருந்தன. துருக்கியை நேட்டோவில் இருந்து விலக்கி வைத்தால் அது கருங்கடல் கேந்திரமுக்கியத்துவதை நேட்டோ இழந்துவிடும் அச்சம் துருக்கிய அவர்களால் எதிர்க்க முடியவில்லை.

சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு துருக்கி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

இறுதியில் பின்லாந்தை நேட்டோவில் இணைப்பதற்கு அமெரிக்கா போர் விமானங்கள் வழங்குவதாக பல வாக்குறுதிகள் வழங்கி இறுதியில் பின்லாந்து நேட்டோவில் இணைக்க துருக்கி சம்மதம் தெரிவித்தது.

எர்டோகன் தோல்வியடைந்தால் நேட்டோவில் சுவீடனை இலகுவாக இணைத்துக்கொள்ள முடியும் என அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நம்பியிருந்த நிலையில் முடிவுகள் இவ்வாறு அமைந்துள்ளன.


No comments