தமிழின அழிப்பின் உச்சநாள் மே18 நினைவேந்தல் நிகழ்வு – ஸ்ருட்காட் யேர்மனி

சிறிலங்கா இனவாத அரசினால் கொத்துக்கொத்தாகத் தமிழினம் இனவழிப்புச் செய்யப்பட்ட மே 18 நாளை நினைவு கூர்ந்து யேர்மனி ஸ்ருட்காட் நகரினில்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உபஅமைப்புகளால் மிகச்சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

ஸ்ருட்காட் நகரமத்தியில் அமைந்துள்ள ஸ்ரட்கார்டன் என்னும் பொது இடத்தில் இனவழிப்பு செய்யப்பட்ட மக்களுக்கான தூபிகள் அமைக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்ட பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. வருகைதந்திருந்த மக்கள் கறுப்புநிற ஆடைகள் அணிந்து ஆகுதியானவர்களுக்கு கண்ணீருடன் மலர் தூவி தீபம் ஏற்றி வணங்கி தமது அகவணக்கத்தைச் செலுத்தினார்கள்.

தொடர்ந்து யேர்மனிய மக்களுக்கான உரைகள் தமிழ் இளையோர் அமைப்பினரால் மிகச் சிறப்பாகச் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து வணக்க நடனங்கள, வணக்கப் பாடல்கள, கவிதைகள, எழுச்சி உரைகள் என்பன நடைபெற்றது. இறுதியில் தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.


No comments