பிரான்சில் நடைபெற்ற மே நாள்

பிரான்சு தேசத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் தொழிலாளர் நாளான மே 01 நேற்று பிரான்சின் பல இடங்களில்

தொழிற்கட்சிகள், விடுதலை அமைப்புக்கள்,தமது கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தினர்.

பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் இந்த பேரணியில் தமிழீழ தேசியத்தலைவரின் திருவுருவப்படத்திற்கு பின்னால், தமிழீழ தேசத்தின் கொடிகளை ஏந்தியும் கடந்த 75 வருடங்களாக சிறீலங்கா என்னும் தேசத்தின் சிங்கள அரசாங்கத்தால் அந்த நாட்டின் பூர்வீக மக்களை அடிமைகளாகவும், அவர்களின் தொழில் அனைத்தையும் பறிப்பதோடு அவர்களில் இலட்சக்கணக்கான உயிர்ப் பலியை இனவழிப்பின் ஊடாகச் செய்து வருவதோடு, இன்று பௌத்தம் என்கின்ற போர்வையில் நிலங்களையும், வழிப்பாட்டு கோயில்களை அழிப்பதையும் தெரியப்படுத்தும் பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இப்போரணியில் கலந்துகொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மக்கள்பேரவை செயற்பாட்டாளர்கள் பிரெஞ்சு மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

பல தமிழ் மக்கள் உணர்வோடு இதில் கலந்து கொண்டு தமது வரலாற்றுக்கடமையை செய்திருந்தனர்.

கடந்த 1 மாதத்திற்கு மேலாகத் தற்போது இருக்கும் அரசுக்கு எதிராகவும், ஓய்வூதியத்திற்கு எதிரான போராட்டம் பிரெஞ்சு மக்களால் நடாத்தப்படுவதுடன் பல்வேறு வன்முறைகளும் இடம் பெற்ற நிலையில் பாரிசில் மட்டும் 2500 காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் தமிழீழ மக்களும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ்மக்களும் உணர்வுகளோடு பேரணிகளில் இணைந்து பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

பிரான்சில் இடம்பெற்ற மேதின ஊர்வலத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் பல்லின மக்களோடு தமிழீழ மக்கள் பலரும் கலந்து கொண்டு தமது உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.

பேரணியின் நிறைவாக பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உரைகளும் இடம்பெற்றன.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் பேரணி நிறைவு கண்டது.

No comments