யாழ். சிறைச்சாலை போராட்டம் முடிவுக்கு வந்தது!


யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் சமரச பேச்சுக்களை அடுத்து கூரையில் இருந்து இறங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டார் என தெரியவருகிறது.

யாழ்ப்பாண சிறைச்சாலை கூரை மேலேறி நேற்று  சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.

குற்றசெயல்களில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது 41) என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

No comments