யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார அஞ்சலி நிகழ்வு


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக  இடம்பெற்றது.

ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலின் போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும்  அஞ்சலி செலுத்தினர்.

இறுதியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.








No comments