9பேர் கைது


 

வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்த நிலையிலே கட்சியின் முக்கியஸ்தர்கள் கைதாகியுள்ளனர.

“தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி, நேற்று திங்கட்கட்கிழமை (22) மதியம்; முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில்,  புதிய நீதிமன்ற உத்தரவொன்றை காண்பித்து போராட்டக்காரர்களை அங்கிருந்து விலகும் படி இலங்கை காவல்துறையினர்  கோரியிருந்தனர்.   

அதனை மறுதலித்த போராட்டக்காரர்கள் இன்று செவ்வாய் (23) காலை மீண்டும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அதனை தொடர்ந்தே, செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பேச்சாளர் சுகாஸ் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வெறிக்காக கொள்கை என்ற வார்த்தையை வெளிப்படுத்துவதாகவும், தாய் நில போராட்டத்திற்காக உயிர்நீத்தவர்களை வைத்து பதவிக்காக தமிழ் தேசியம் பேசுகின்றார்கள் என்றும் முன்னணியின் முன்னாள் பிரமுகரான  வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


No comments