சீன மண்ணெய் வாங்கலையோ!

 


வடக்கு கிழக்கு மீனவர்களை தமது விசுவாசிகளாக்கிக்கொள்ள இந்திய சீன அரசுகள் தொடர்ந்தும் முனைப்பு காண்பித்தே வருகின்றன.

முன்னதாக இந்திய அரசு வடக்கு மீனவர்களிற்கு உலர் உணவு நிவாரணம் மற்றும் எரிபொருள் என்பவற்றினை நிவாரணமாக வழங்கியிருந்தன. 

இந்நிலையில் சீனாவின் உதவியோடு கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வை அரச கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில்; கடற்றொழிலாளர்கள்; தொழிலாளர்கள் நாளொன்றுக்கு சுமார் 5000 ரூபாய் வரை மண்ணெண்ணைக்கு செலவு செய்து கடற்றொழிலுக்குச் சென்று வீடு திரும்புகின்றனர். 

அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் போதுமான வருமானம் கிடைப்பதில்லை.

அத்தகைய நிலையில் அவர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவ வேண்டும் என்று பல தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றோம். 

அவ்வாறான முயற்சி மற்றும் கோரிக்கைக்கு கிடைத்த பலனாகவே சீனா அரசு வறுமையில் வாடும் எமது கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், வீட்டு வசதி மற்றும் அரிசி போன்ற உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. அதற்காக சீன அரசுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அந்தவகையில் சுமார் 27,000 கடற்றொழிலாளர்களுக்கு தலா 150 லீற்றர் அளவில் மண்ணெயினை வழங்குவதற்கு சீனா அரசு உதவி  செய்துள்ளது. 

ஒருவருக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றதென அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments