யாழ் நகர் பகுதியில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் முட்டாஸ் கடை சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் , யாழ் நகரை நோக்கி பயணித்த கனரக வாகனமும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸார் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதுடன், விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments