தமிழர்கள் வேலை செய்யும் மெர்சிடிஸ் பென்ஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!


யேர்மனி மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத் தொழிற்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

யேர்மனியின் தெற்குப் பகுதியான ஸ்ருட்காட் சின்டில்பிங்கன் என்ற நகரில் அமைந்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் மகிழுந்துத் தொழிற்சாலை.

இன்று வியாழக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 7.45 மணிக்கு மகிழுந்து உற்பத்தி செய்யும் தொழிற்காலையில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. 

உயிரிழந்தவர்கள் இருவரும் 44 வயதுடையவர்கள் எனவும் குறித்த இருவரையும் ஒருவரே சுட்டுக்கொன்றதாக நினைப்பதாக அரச சட்டவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தயாரிப்புக் குழுத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தளவாட நிறுவனத்தைச் சேர்ந்த 53 வயதான வெளி ஊழியராக உள்ளார். 

சந்தேகத்திற்குரிய குற்றவாளியை அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் காவல்துறையினர் வரும் வரை தடுத்து வைத்திருந்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஸ்டுட்கார்ட்டிலிருந்து தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் காவல்துறை மற்றும் மீட்புப் பணியாளர்கள் சென்று விசாரணைகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

காயமடைந்த மற்ற நபர்களைத் தேடும் நடவடிக்கைகள் கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. இது ஒரு சோகமான செய்தி எங்களை ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த மகிழுந்து தொழிற்சாலையில் அதிகளவான ஈழத்தமிழர்கள் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments