பின்லாந்து பாலம் இடிந்து விழுந்ததில் 27 சிறார்கள் காயம்!!


பின்லாந்தில் தற்காலிக பாதசாரி பாலம் இடிந்து விழுந்ததில் 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரும் சிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக களப் பயணத்திலிருந்து திரும்பிய 8 ஆம் வகுக்கு மாணவர்களின் ஒரு தொகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து பின்லாந்தின் தலைநகரான ஹெல்சின்கியின் மேற்கே எஸ்பூவின் டாபியோலா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி முற்பகல் 9.30 மணியளவில் நடந்தது.

அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் குறித்த பாலம் ஒட்டுப் பலகை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

பாலம் இடிந்து விழுந்ததில் பலர் சில மீட்டர் தூரத்தில் விழுந்தனர். 

பெரும்பாலான காயங்கள் மூட்டு முறிவுகள். காயமடைந்தவர்களில் 24 பேர் அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயங்கள் எதுவும் உயிருக்கு ஆபத்தாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

லைமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்த விபத்து பற்றிய அதிர்ச்சியான செய்தி என்று ஃபின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ ட்வீட் செய்துள்ளார். 

No comments