கெமரூனில் 30 பெண்களை கடத்திய கிளர்ச்சியாளர்கள்


ஆபிரிக்க நாடான கெமரூனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் 30 பெண்களைக் கடத்திச் சென்றதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நைஜீரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள பாபாங்கி என்ற கிராமத்திலிருந்து பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அப்பகுதியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேமரூனின் அமைதியற்ற ஆங்கிலோஃபோன் பகுதி

2017 இல் ஆங்கிலம் பேசும் பிரிவினைவாதிகள் கிளர்ச்சியைத் தொடங்கியதிலிருந்து கேமரூன் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிருப்தியாளர்கள் பிரெஞ்சு மொழி பேசும் பெரும்பான்மையினரால் ஆதிக்கம் செலுத்தும் பகுதியிலிருந்து பிரிந்து ஒரு சுதந்திரமான, ஆங்கிலம் பேசும் அரசை உருவாக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளனர்.

இந்த மோதலால் இதுவரை 6,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்டது. மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று சர்வதேச நெருக்கடி குழு (ICG) தெரிவித்துள்ளது.

No comments