ஷெல்லின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் காலநிலை ஆர்வலர்கள் எதிர்ப்பு!


லண்டன் எச்செல் மாநாட்டு யைத்தில் நடந்த எண்ணெய் நிறுவனமான ஷெல்லின் வருடாந்த பங்குதாரர் கூட்டத்தில் காலநிலை ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரவித்தனர். பின்னர் எதிர்ப்புத் தெரிவித்தவர்களைப் பாதுகாப்பு காவலர்கள் இழுத்துச் சென்றனர்.

டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் எழுந்து நின்று, “ஷெல்லை மூடு”  “நரகத்துக்குப் போ ஷெல்” என்று கோஷமிட்டு பாடியதால் ஷெல் தலைவர் ஆண்ட்ரூ மெக்கன்சியால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டத்தை ஆரம்பிக்க முடியவில்லை.

எதிர்ப்பாளர்கள் மேடையில் ஏறுவதற்காக ஓட முயன்றனர். ஆனால் பாதுகாவலர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கிரீன்பீஸ் மற்றும் எக்ஸ்டிங்க்ஷன்  உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆர்வலர்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்த்தி ஷெல் சாதனை இலாபம் ஈட்டுவதாக கூறுகிறார்கள்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்ததால், மற்ற எண்ணெய் நிறுவனங்களைப் போலவே, ஷெல் இந்த ஆண்டு அதிக இலாபத்தை ஈட்டியுள்ளது.

No comments