வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

 




வவுனியா  -  வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினரின் கைதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - தமிழர்களின் தொன்மையை அழிக்காதே, வெடுக்குநாறி எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலி, போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களும் கலந்துகொண்டனர்.


No comments