துயிலுமில்லங்களை விடுவியுங்கள்

 


இலங்கை இராணுவத்தால் வடகிழக்கில்; ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  துயிலுமில்லங்களை விடுவிக்க கோரி குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளது.

முல்லைதீவில் அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் அறிவித்துள்ளனர்.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து 23 ஆவது சிங்க படையணி முகாம் அமைந்துள்ளது.

"எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்கிறார்கள், கிரிக்கெட் விளையாடுகிறார்கள், உணவகம் நடத்துகிறார்கள்.

எங்கள் பிள்ளைகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவதற்கு அவர்கள் உடனடியாக கல்லறையை விட்டு வெளியேற வேண்டும்."என்று குரல்கள் எழுந்துள்ளன.

அளம்பில் மாவீரர் மயானம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரவேண்டும். விதைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு பெற்றோர்களும் உறவுகளும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேற்றத் தவறினால் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

போர் காலத்திலும், போரின் முடிவுற்றதைத் தொடர்ந்தும் வடக்கு - கிழக்கு முழுவதும் 25 மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது


No comments