அமெரிக்க வாகனத் தொடரணி மீது தாக்குதல்: 4 பேர் பலி!!
தென்கிழக்கு நைஜீரியாவில் ஆயுததாரிகள் அமெரிக்க வாகனத் தொடரணி மீது நடத்தப்பட் பதுங்கித்தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
அனம்ப்ரா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் பலியானவர்களில் இருவர் அமெரிக்க தூதரக ஊழியர்கள் என்றும், மற்ற இருவரும் காவல்துறை அதிகாரிகள் என்று கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மேலும் மூன்று பேரை கடத்திச் சென்றுவிட்டு அவர்களது வாகனத்திற்கு தீ வைத்தனர்.
வாகனத்தில் தொடரணியில் அமெரிக்க குடிமக்கள் யாரும் இல்லை இருக்கவில்லை என்று வாஷிங்டன் கூறுகிறது.
எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் மிக முக்கியமானது, மேலும் களத்திற்கு பயணங்களை ஏற்பாடு செய்யும் போது நாங்கள் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறோம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
நைஜீரிய அதிகாரிகள் பெரும்பாலும் பிராந்தியத்தில் வன்முறைத் தாக்குதல்களை பிரிவினைவாத பழங்குடி மக்கள் இயக்கம் (ஐபோப்) மீது குற்றம் சாட்டுகின்றனர்.
Post a Comment