ஆளுநராக மீண்டும் பி.எம்.எஸ்.சாள்ஸ்!
வடக்கு மாகாணசபையின் ஆளுநராக மீண்டும் திருமதி.பி.எம்.எஸ்.சாள்ஸ் நியமனமாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ளுராட்சிசபை தேர்தல்களை நடத்தாதிருக்கும் ரணிலின் முயற்சிக்கு தேர்தல் ஆணைக்குழுவிலிருந்த திருமதி.பி.எம்.எஸ்.சாள்ஸ் ஒத்துழைத்திருந்தார்.
முன்னதாக மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை இன்று (15) அமுலாகும் வகையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னதாக தற்போதுள்ள ஆளுநர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டுமென ஜனாதிபதி தரப்பிலிருந்து கோரப்பட்டிருந்தது.
எனினும் முன்னாள் கடற்படைத்தளபதியும் தற்போது ஆளுநராக செயற்பட்டுவருபவருமான வசந்த கரன்னகொட ராஜினாமா செய்ய மறுத்தததையடுத்து ஏனைய ஆளுநர்களும் ராஜினாமா செய்ய மறுத்திருந்தனர்.
இதனிடையே திருமதி.பி.எம்.எஸ்.சாள்ஸ் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த போதும் பின்னர் தூக்கிவீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment