தொடருகிறது இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்கள்: 21 பேர் பலி!


இஸ்ரேல் நோக்கி பாலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட ரொக்கெட் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்றுப் புதன்கிழமை பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்ததை அடுத்து, மேலும் 7 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தன்கிழமை கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்டின் போராளிகள் என்று குழு தெரிவித்துள்ளது.

10 வயது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த லயன் முதுக் என்ற சிறுமியும் கொல்லப்பட்டார்.

மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதை மட்டுப்படுத்தியுள்ளனர். பள்ளிகள் தனியார் மற்றும் பொது வசதிகள் என அதைத்து இயல்பு நிலையிலும் முடக்கப்பட்டுள்ளன. 

காசா பகுதியில் இருந்து தெற்கு இஸ்ரேலிய நகரங்களை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. இஸ்ரேலின் அயர்ன் டோம் இந்த ராக்கெட்டுகளை இடைமறித்துள்ளன.

புதன்கிழமை மாலை வரை 400க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலானவை, தடுக்கப்பட்டதாகவும் ஏனையவை திறந்த பகுதிகளில் விழுந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

No comments