வோக்ஸ்வாகன் கூட்டத்தில் கேக் வீசிய காலநிலை எதிர்பாளர்கள்


யேர்மனி மகிழுந்து தயாரிப்பு நிறுவனமான வொல்ஸ்வாகனின் (Volkswagen) வருடாந்த பங்குதாரர் கூட்டத்தில் காலநிலை எதிர்பாளர்கள் புகுந்து கூட்டத்தை சீர்குலைத்தனர்.

நேற்றுப் புதன்கிழமை பேர்லினில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்போர் கூடத்திற்குள் நுழைந்த மேலாடையின்றி முதுகில் வர்ணம் பூசப்பட்ட ஒரு பெண் உட்பட பத்து ஆர்வலர்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் ப்ளூமின் பேச்சை இடைமறித்தார்கள். அவர்களை பாதுகாப்பு ஊழியர்கள் வேகமாக வெளியேற்றினர்.

வொஸ்வாகனின் தலைவர் ஹன்ஸ் டைற்ரேர் போட்ஸ் (Hans Dieter Pötsch) உரையின் போது காலநிலை எதிர்பாளர் ஒருவரால் கேக் வீசப்பட்டது. அத்துடன் கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியேயும் எதிர்பாளர்கள் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோர் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியது.

No comments