விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கு இடமில்லை!வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம். அதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாரில்லை என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழர் தாயகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அவ்வாறான சிந்தனையுடன் செயலாற்ற முன்வரவேண்டும் என அனைத்து தமிழ் கட்சிகளிடமும் வேண்டிக்கொள்வதாகவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் கணேசலோகநாதன் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில்,  கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் திருகோணமலை மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்துக்குருமார்கள் கலந்துகொண்டனர். 

வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும், கட்சி பேதங்களை கடந்து ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும்.

தற்போது தையிட்டி, திருகோணமலை போன்ற இடங்களில் பௌத்தமயமாக்கலை மூலாதாரமாக கொண்டு பௌத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் தற்போது புதிது புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டுவருவதாகவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் குற்றஞ்சுமத்தியுள்ளது.


No comments