கருங்கடல் தானிய ஒப்பந்தம் மேலும் 2 மாதங்கள் நீடிப்பு


ஐக்கிய நாடுகள் சபையின் தானிய ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைனிலிருந்து உலக சந்தைக்குத் தானியங்களை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தம் இன்று மே 18 முடிவடையவுள்ள நிலையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய ரஷ்ய இணங்கியுள்ளது என துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

எமது நாட்டின் முயற்சிகள், நமது ரஷ்ய நண்பர்களின் ஆதரவு, உக்ரேனிய நண்பர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க முடிவு செய்யப்பட்டது என்று என்று எர்டோகன் தொலைக்காட்சியில் கருத்துரைக்கும் போது கூறினார்.

உக்ரேனிய மற்றும் ரஷ்ய அதிகாரிகள், நடந்துகொண்டிருக்கும் போரையும் மீறி கருங்கடல் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியை அனுமதிக்க ஒப்பந்தத்தின் நீட்டிப்பை உறுதிப்படுத்தினர்.

முயற்சியின் பணி நீட்டிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அது திறம்பட செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று குப்ரகோவ் பேஸ்புக்கில் எழுதினார்.

கருங்கடல் முன்முயற்சி இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று துருக்கிய ஜனாதிபதியின் அறிவிப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறினார்.

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் துருக்கிய தரகு ஒப்பந்தத்தை வரவேற்றார். இந்த ஒப்பந்தங்கள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியம்; உக்ரேனிய மற்றும் ரஷ்ய தயாரிப்புகள் உலகிற்கு உணவளிக்கின்றன" என்று குட்டெரெஸ் கூறினார்.

கருங்கடல் தானிய முன்முயற்சி எனப்படும் இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதம் 60 நாட்களுக்கு புதுப்பிக்கப்பட்டது.

ஒப்பந்தம் மீண்டும் மே 18 அன்று புதுப்பிக்கப்பட்டது மற்றும் உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து சுமார் 30.3 மில்லியன் டன் தானியங்கள் வெளியேற அனுமதித்துள்ளது.

இதில் ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உதவி நடவடிக்கைகளுக்காக சுமார் 625,000 டன் உணவுகள் அடங்கும்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற மலிவு விலையில் உணவுப் பொருட்களின் முக்கிய விநியோகஸ்தராக இருக்கின்றனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, பிப்ரவரி 2022 ஐத் தொடர்ந்து வரும் மாதங்களில் ஏற்றுமதியை நிறுத்திய பின்னர், போரில் இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஐநா மற்றும் துருக்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

No comments