1,100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு பைபிள் 38 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை


1.100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுத்தப்பட்ட பைபிள்  நீயூயோர்க்கில் 38 மில்லியனுக்கு ஏலத்தில் விடப்பட்டு விற்கப்பட்டது.

இது உலகின் மிகப் பழமையான பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றாகும்.

கோடெக்ஸ் சாஸூன், தோலால் கட்டப்பட்ட, கையால் எழுதப்பட்ட காகிதத்தோல் தொகுதி, கிட்டத்தட்ட முழுமையான ஹீப்ரு பைபிளைக் கொண்டுள்ளது.

இது ருமேனியாவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதரான ஆல்ஃபிரட் எச் மோசஸால் வாங்கப்பட்டது.

உலகில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று இஸ்ரேல் டெல் அவிவில் உள்ள யூத மக்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.

No comments