சிங்கள போர் வீரர் நினைவேந்தல்:கோத்தா பதுங்கினார்!

 


முதல் தடவையாக 14 ஆவது சிங்கள போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வினை ராஜபக்ச குடும்பத்தினர் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 ஆவது சிங்கள போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வானது நேற்றையதினம் (19.05.2023 ) அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பத்தரமுல்லை போர் வீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது.

இந்நிலையில், குறித்த 14 ஆவது வருட உள்நாட்டு யுத்த வெற்றி கொண்டாட்டத்தினை ராஜபக்சக்கள் புறக்கணித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தை வெற்றி கொண்டதாக சிங்கள மக்களால் ராஜபக்சக்கள் கொண்டாடப்பட்டார்கள்.

யுத்தம் எனும் பெயரில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சாக்கள், 2009 ம் ஆண்டு யுத்தம் முடிந்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்து நினைவேந்தல் நிகழ்விலும் பங்குபற்றியிருந்தனர்.

மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும்,  கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய தரப்புக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வினை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிகழ்வில் பங்குபற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

குறித்த தரப்பினருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் நிகழ்வினை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக போர் வெற்றி நாள் உரையினை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதனைத் தவிர்த்திருந்ததாக கூறப்படுகின்றது.

அதேசமயம், பொது மக்கள் போராட்டங்களை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச பொது நிகழ்வுகளினை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments