ஜனாதிபதிக்கும், வடக்கு , கிழக்கு எம்.பி களுக்கும் இடையில் இரண்டு நாள் சந்திப்பு!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினமும் நாளைய தினமும் நடைபெறவுள்ளது. 

இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை, நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

 நாளையதினம் வெள்ளிக்கிழமை சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments