கோப்பாய் பொலிஸாருக்கு கத்தியை காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்


வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு இருந்த கோப்பாய் பொலிஸாருக்கு கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து . பொலிஸாரை கத்தியை காட்டி மிரட்டியவர்கள் என  பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர்கள் பொலிஸ் நிலையத்தில் தமது சட்டத்தரணி ஊடாக சரணடைந்திருந்தனர். 

சரணடைந்த இருவரையும் கைது செய்த பொலிஸார் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அதன் போது சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார். 

அதனை நிராகரித்த மன்று அவர்கள் இருவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டது. 

No comments