போலி நாணயத்தாள்களுடன் யாழ்.பல்கலை மாணவன் உள்ளிட்ட இருவர் கைது


பெருமளவான பொலி நாணயத்தாள்களுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மாணவன் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோரை ஆனையிறவு சோதனை சாவடியில்  சோதனை இடப்பட்ட போது , அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணய தாள்கள் 250 . 500 ரூபாய் போலி நாணய தாள்கள் 27 மீட்கப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவரையும் பொலிஸார் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments