19 வயதுடைய இளம் ஜோடி மாயம்!


திருமணத்திற்கு நாள் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நீர் வீழ்ச்சிக்கு சென்ற இளம் ஜோடி நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர். 

காணாமல் போனோரை தேடும் பணியில் ஊரவர்கள் பொலிஸார் மற்றும் மீட்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளனர். 

வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும், குடாஓயா, லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். 

நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்தவேளை திடீரென நீர் வரத்து அதிகமாகி இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர்.  


No comments