காப்புறுதி பணத்திற்காக மனைவியை படுகொலை செய்தார் எனும் சந்தேகத்தில் கணவன் கைது


காப்புறுதி பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் 25 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

வீதியோரமாக நின்ற பெண்ணை வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்து இருந்தார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை குறித்த சம்பவம் விபத்து அல்ல எனவும் , அதொரு திட்டமிட்ட படுகொலை எனவும் பொலிஸார் கண்டறிந்தனர். 

அத்தனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தனது மனைவியை படுகொலை செய்த கணவனே திட்டம் தீட்டினார் எனவும் , கணவனின் திட்டத்தின் பிரகாரமே விபத்து ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிய வந்ததை அடுத்து கணவனை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

No comments