சூடானில் 7 நாள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்?


சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் இடையில் அதிகார மோதல் பல வராங்களாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை இந்த மோதலில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இரு தரப்பினரும் 7 நாள் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பிலும் சமாதானப் பேச்சுகளுக்காக பிரதிநிதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும், அவர்கள் விரும்பும் இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தென் சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை சூடானை விட்டு 73 ஆயிரம் பேர் வெளியேறி விட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஒருவார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் போதும் அது கடைபிடிக்கப்படுமா என்பது உறுதியாகவில்லை.

No comments