சூடானில் தொடரும் அதிகார மோதல் 100 பேர் உயிரிழப்பு!


சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் ஆயுத மோதலில் இதுவரை 100 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஆர்எஸ்எவ் (RSF-Rapid Support Forces) என்று அழைக்கப்படும் துணை இராணுவக் குழு  கட்டளை மையங்கள், விமானத் தளங்கள், ஜனாதிபதி மாளிகை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்தது. 

அதிகாரப்போட்டியே இந்த மோதலுக்கு வழிவகுத்துள்ளது. இராணுவத் தலைவரான ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானுக்கும் துணைத் தலைவராக இருக்கும் துணை இராணுவக் குழுவிற்கு கட்டளையிடும் ஜெனரல் ஹெமெட்டி என்றும் அழைக்கப்படும் ஜெனரல் ஹம்தான் டகாலோ ஆகியோருக்கு இடையேயான அதிகாரப் போட்டியால் இந்த மோதல்கள் அடித்தளமாக உள்ளன.

2019 ஆம் ஆண்டில் நீண்டகாலமாக பணியாற்றிய ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரை அகற்றுவதற்கான மக்கள் எழுச்சியிலிருந்து இராணுவம் தன்னைச் சுற்றி அதிகாரத்தை குவித்துள்ளது.

கடந்த இரு நாட்களாக தலைநகர் காட்டுமில் தொடர்ந்து சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இராணுவ தலையகத்தின் நுழைவாயிலுக்கு முன்னால் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுக்கொண்டுவர துணை இராணுவக் குழு முயற்சிக்கிறது.

அருகிலுள்ள நகரமான ஓம்பர்ட்மேனிலும், இராணுவத்தால் போர் விமானங்கள் துணை இராணுவத்தினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும் அதனை எதிர்க்க  ஆர்எஸ்எஃப் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் பயன்படுத்தி சண்டை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

2000 களில் டார்பூர் பிராந்தியத்தில் நடந்த மோதலில் போராடிய ஜான்ஜவீட் அல்லது மக்கள் பாதுகாப்புப் படைகள் என அழைக்கப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய போராளிகள் என அழைக்கப்படுபவற்றிலிருந்து ஆர்எஸ்எவ் உருவானது. 

காலப்போக்கில், போராளிகள் வளர்ந்தனர். அவர்கள் 2013 இல் ஆர்எவ்எஸ் இல் சேர்க்கப்பட்டனர். மேலும் அவர்களின் படைகள் குறிப்பாக எல்லைக் காவலர்களாகப் பயன்படுத்தப்பட்டன. 2015 இல், ஆஸ்எஸ்எவ் சூடானின் இராணுவத்துடன் சேர்ந்து, சவூதி மற்றும் எமிராட்டி படைகளுடன் யேமனில் போரில் போரிட துருப்புக்களை அனுப்பத் தொடங்கியது.

முன்னணி அரபு நாடுகளும் அமெரிக்காவும் சிவில் அரசாங்கத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தியுள்ளன, அதே நேரத்தில் ஆபிரிக்க ஒன்றியம் அதன் உயர்மட்ட இராஜதந்திரியான Moussa Faki Mahamat ஐ போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது.

எகிப்து மற்றும் தெற்கு சூடான் போரிடும் பிரிவுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தன.

No comments