சீனப் பாதுகாப்பு அமைச்சர் புதின் சந்திப்பு: எங்கள் நட்புக்கு எல்லைகளே கிடையாது!!


சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீ ஷாங்பூ, இரு இடதுசாரி கொள்கையுடைய நாடுகளுக்கும் வலுவான நட்பு இருப்பதாக தெரிவித்தார்.

சீன - ரஷ்ய நட்பில் எந்தவித எல்லையும் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சோய்குவும் உடன் இருந்தார்.

கடந்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாஸ்கோவில் புதினை சந்தித்துப் பேச்சு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.


No comments