நம்பிக்கையில்லை:நீதிபதி நேரில் செல்கிறார் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவகின்றதாவென்பதை கண்டிறிய முல்லைதீவு நீதிவான் களம் விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் கடந்த மார்ச் நீதிமன்றில் மன்றில் தடையினை தாண்டி கட்டட பணிகள் முன்னெடுக்கப்படுவதாக முறையீடு செய்யப்பட்டது.

தொடர்புடைய  வழக்கு விசாணைகள் இன்று(27) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது

அவ்வாறு நீதிமன்ற கட்டளைகளை மீறி கட்டுமானப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரச சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர் இதனை ஆலய தரப்பு சட்டத்தரணிகள்  எதிர்த்திருந்த நிலையில் பல மணி நேர வாத விவாதங்களின் பின்னர் நீதிபதி ரி.சரவணராஜா   04.07-2023 அன்று குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று    நிலமைகளை பார்வையிட்ட பின்னர்  கட்டளை  வழங்க  வழக்கு விசாரணைகளை  ஆடி மாதம் நான்காம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்  

குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விஹாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதானது, நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயற்பாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments