வெளியான இரகசிய ஆவணம்: உக்ரைன் போரில் மேற்கத்தைய சிறப்புப் படைகள்!


கடந்த சில தினங்களக்கு முன்னர் ஆன்லைனில் கசிந்த இரகசிய ஆவணங்களின்படி, மேற்கத்திய நாடுகளின் சிறப்புப் படைகள் உக்ரைனில் தரையிறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து (50), நேட்டோ உறுப்பினர்களான லாட்வியா (17), பிரான்ஸ் (15) மற்றும் அமெரிக்கா (14) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய குழு உள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்புப் படைகள் சரியாக என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அல்லது அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இந்த மட்டத்தில் இருந்ததா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து பலர் ஊகித்ததை இந்த வெளிப்பாடு உறுதிப்படுத்துகிறது.

உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளின் போர் பற்றிய சமரச விவரங்களைக் கோடிட்டுக் காட்டும் "உயர் இரகசியம்" எனக் குறிக்கப்பட்ட அமெரிக்க ஆவணங்கள் சமீபத்தில் கசிந்து ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பயி நாடுகள் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

No comments