ஊடக அடக்குமுறை:சஜித்திற்கும் பயமாம்!



"பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஊடக அடக்குமுறைக்காக ஒலிபரப்பு அதிகார சட்டமொன்றையும் அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது.அதன் மூலம், சுதந்திர ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய முயற்சி தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கையாகும்.அதன் ஊடாக அரசாங்கத்திற்குக் கீழ்படிந்து இணங்கும் பொம்மை ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வாதிகார ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை கொண்டுவந்து நாட்டின் ஊடகங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உடனடியாக நிறுத்துவதற்கு முன்வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது தென்னிலங்கையில் மௌனம் காக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இலங்கை ஆட்சியாளர்கள் தென்னிலங்கையினை இலக்கு வைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிற்கு எதிராக சட்டங்களை அமுல்படுத்த முற்பட்டுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.


No comments