அமெரிக்காவில் பேச்சு: தாய்வானை சுற்றிப் போர்க்கப்பலை அனுப்பியது சீனா!!


தைவான் அதிபர் சாய் இங்-வென் மற்றும் அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு சீனா போர்க்கப்பல்களை அனுப்பியது.

தைவானை பிரிந்த மாகாணமாக கருதும் சீனா, தீவை மீண்டும் பிரதான நிலப்பகுதியுடன் இணைப்பதாக உறுதியளித்துள்ளது. "அமைதியான மறு ஒருங்கிணைப்புக்கு" ஆதரவாகக் கூறினாலும், இந்த நோக்கத்தை அடைய இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதை அது நிராகரிக்கவில்லை.

சீன ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் தைவானை பாதுகாப்பதாக அமெரிக்கா முன்பு உறுதியளித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மெக்கார்த்தி, தைவானிடம் தொடர்ந்து ஆயுத விற்பனை செய்வதே, சீனாவிடம் இருந்து அதைப் பாதுகாக்க சிறந்த வழி என்றார்.

No comments