வடகிழக்கு எங்கும் பெண்கள் போராட்டம்!இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் தமிழர் தாயகமெங்கும் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் பிரதிநிதிகளுடன் மன்னார் ,யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட பெண்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தியே பெண்கள் அமைப்பினரால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டமானது இன்னொரு முகமூடியில் மேலும் பலம் கொண்டு வருவதை மக்களால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடகிழக்கு மாகாண பெண் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட  நிலையில் இன்று கிழக்கில் மட்டக்களப்பிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாண பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியாவில் பத்தினியார் மகிழங்குளம் முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.


No comments