பாக்முட் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக வாக்னர் குழு அறிவிப்பு


உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யக் கூலிப்படையான வாக்னர் குழு அறிவித்துள்ளது.

இத்தகவலை கூலிப்படையின் தலைவர் ஜெவ்ஜெனி பிரிகோஜின் டெலிகிராமில் கூறியுள்ளார். அத்துடன் அவர் அப்பகுதியில் கொடியுடன் இருக்கும் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பாக்முட் நகரத்தின் நகர மண்டபம் மற்றும் நகரத்தின் மையத்தை கைப்பற்றிவிட்டதாகவும் தங்களது தளபதிகளால்அங்கு கொடி ஏற்றப்பட்டுள்ளது என பிரிகோஜின் கூறினார்.

ஆனால் தனது துருப்புக்கள் இன்னும் நகரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகிறது உக்ரைன். 

எதிரிகள் பாக்முட் மீதான தாக்குதல்களை நிறுத்தவில்லை.அதை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். நமது வீரர்கள் 25க்கும் மேற்பட்ட எதிரி தாக்குதல்களை முறியடித்துள்ளன என்று உக்ரேனிய இராணுவ ஆய்வாளர் ஓலேஹ் ஜ்தானோவ் கூறினார்.

அத்துடன் ரஷ்யப் படைகள் அசோம் உலோக ஆலையைக் கைப்பற்றின என அவர் குறிப்பிட்டார்.

இந்நகரத்தில் போரானது ஒரு வருடம் கடந்த நிலையில் இரத்தக்களரி நிறைந்த ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

டொன்பாஸ் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாட்டிற்காக ரஷ்யர்களுக்கும் உக்ரேனியர்களுக்கும் இடையிலான சண்டையின் அடையாளமாக மாறியுள்ளது.


No comments