அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்: 400 பேர் கைது!!


ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் நடந்த வன்முறைச் சோதனையில் பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களை இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்கி கைது செய்துள்ளனர்.

பாலஸ்தீனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது 400 பாலஸ்தீனியர்கள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு இஸ்ரேலிய காவலில் உள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அடரோட்டில் உள்ள காவல்நிலையத்தில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் உட்பட அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தியதாகவும், வழிபாட்டாளர்களுக்கு மூச்சுத்திணறல் காயங்கள் ஏற்பட்டதாகவும், தடியடி மற்றும் துப்பாக்கிகளால் தாக்கியதாகவும் பாலஸ்தீனிய சாட்சிகள் தெரிவித்தனர்.

No comments