அத்துமீறி வழிபட முடியாது:ரணில்
வடக்கில் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது .அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலை தொடர்பிலேயே அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்இ வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.
இந்த பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது.
நீதிமன்ற வழக்கில் ஒரு பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
எனினும், வடக்கில் மத ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளை வளர விடாமல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரில் விரைந்து தீர்வு காண்போம் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment