அரசி மட்டும் தான்:கடல் விற்பனைக்கல்ல!யாழில் வறுமையில் வாடும் மக்களிற்கு வெறும் 10 கிலோகிராம் இலவச அரிசியை  விநியோகம் செய்ய அரசு பொது நிதியில் பெரு விழா நடத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரிசி வழங்கும் நிகழ்வில் அரச அமைச்சர்கள் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை கூறி, தமிழ் மக்களுக்கு ஒரு போதையை ஊட்டுகின்றனர். அவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அரச கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 லட்சம் குடும்பங்களை தெரிவு செய்து, ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டைக்காடில் இருநூறு ஏக்கர் சீனாவுக்கும், கிளிநொச்சியில் 800 ஏக்கர் வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.


அதில் எந்தவிதமான உண்மை இல்லை.  நமது அரசாங்கத்தில் அவ்வாறு திட்டமும் இல்லை. எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அவ்வாறான பொய்யினை சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதன்  ஊடாக மக்களை தவறாக வழி நடத்துகின்றனர்.

வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை வைத்து வருகின்றார்கள். அது தொடர்பில்,  மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பூநகரி மற்றும் வடமராட்சி கிழக்கில் நூற்றுக்கணக்கான ஏக்கர் கடற்கரைகளை இறால் பண்ணைகள் என புதிய வெளியாருக்கு வழங்க தற்போது டக்ளஸ் தேவானந்தா முற்பட்டுள்ள நிலையில் உள்ளுர் பொதுமக்களது தலையீட்டால் அம்முயற்சி தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  No comments